×

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு ஊசுட்டேரியில் பெடல் படகு சவாரி துவக்கம்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வில்லியனூர் :  வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் பெடல் படகு சவாரி துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலங்கள், ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.அதன் ஒருபகுதியாக வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரிக்கு விளைநிலங்கள், வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருவதால் ஏரியின் நீர் மட்டம் சற்று உயர்ந்து வருகிறது. இதனால் ஊசுட்டேரி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வர துவங்கி உல்லாசமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2 பேர் அல்லது 4 பேர் மட்டும் காலால் மிதித்து செல்லக்கூடிய பெடல் படகு சவாரி துவங்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி சென்றனர். திடீரென பெடல் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் 15 பேர் செல்லக்கூடிய பெரிய படகில் மட்டும் சென்று வந்தனர்.தற்போது மீண்டும் பெடல் படகு சவாரி துவங்கியுள்ளது. இதனால் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊசுட்டேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து பெடல் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இரண்டு நபர் செல்லும் பெடல் படகிற்கு அரை மணி நேரத்திற்கு ரூ.100ம் ஒரு நேரத்திற்கு ரூ.200ம், நான்கு நபர்கள் செல்லக்கூடிய பெடல் படகிற்கு அரை மணி நேரத்திற்கு ரூ.200ம், ஒரு மணி நேரத்திற்கு ரூ.300ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த செலவில் தனக்கு தானே படகு ஒட்டி இயற்கை அழகை ரசிப்பதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு ஊசுட்டேரியில் பெடல் படகு சவாரி துவக்கம்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ousutteri ,Villianore ,Villianur ,Ousutari ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...